Transformation
Through Compassion
Are you ready for the Change?
Free Medical
Treatment
Providing
Midday Meal
Support for Education
We exist for
-
PrinciplesSpreading Saint Ramalinga Vallalar’s Principles and Ethics
-
SpiritualityEducating and Empowering the People towards Spiritual well-being.
-
The NeedySupporting the Needy Poor People on all Aspects of their Life.
முன்னுரை
கடவுள் உண்மை விளக்கம்
எத்தனையோ உலகங்களும், எத்தனையோ சூரிய, சந்திர, நட்சத்திர, ஒளிக்கோள்களும், சூழ்ந்த இந்த மஹா பிரபஞ்சத்தில் நாம் வசிக்கின்ற இந்த பூமி, ஒரு சிறிய பகுதியே. அதிலும் எத்தனையோ வகையான ஜீவராசிகள் வசிக்கின்ற இந்த உலகத்தில் மனித இனமே, மிகச்சிறந்த பிறப்பாகும். ஏனென்றால் அவனுக்கு உரிய “மனம்” என்ற சிந்திக்கின்ற கருவியின் மூலம், தன்னைப்பற்றியும், தன்னைச் சூழ்ந்த பொருள்களைப் பற்றியும், அறிந்து நல்ல வாழ்க்கையை அவன் அமைத்துக் கொள்ள முடியும்.
இதற்கெல்லாம் காரணமான ஒரு பெரிய சக்தியைதான் “கடவுள்” என்றும் “இறைவன்” என்றும் கூறுகின்றோம். நமக்கெல்லாம் புரிகின்ற ஒன்று, என்னவெனில் உலகியல் சுகங்களும், உலக ஆன்மீக நெறிகளும், இன்றைய நாளில் மக்களை சந்தோஷமாக வைக்கவில்லை.
அதற்கான ஒரு வழி இன்று கிடைத்திருக்கின்றது என்றால் அதுதான் “அருள்நிலை ஒளி வாழ்வு என்கின்ற பேரின்ப பெருவாழ்வுக்கு நம்மை அழைத்து செல்கின்ற ஒரு வாழ்வுமுறை. இதை நன்கு அறிவதற்கு “கடவுள் உண்மை விளக்கம்” அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த பிரபஞ்சத்தில் நிறைந்து, நிலைத்து “சத்தாய் எதற்கும் ஆதாரமாய் இருப்பது, பெருஞ்ஜோதி. அது கடவுளிடமிருந்து வெளிப்படும் அருள் ஒளியே ஆகும். அந்த ஒளி நிலையில்’ இருந்து வெளிப்பட்ட ஒரு சிறிய அணு ஒளியே மனிதனின் தலை நடுவில், மூளைப்பகுதியில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் ஜீவ ஆன்மா” ஆகும். ஒரு மனிதன் தன்னுடைய மேலான பக்குவ அறிவு நிலையில் “பரமான்மா ஒளியே தன்னுள் ஆன்ம உயிர் ஒளிச்சக்தியாய் இருப்பதை அறிகின்றான்.
இந்த பக்குவ அறிவு ஏற்படுவதற்கு, மனிதனின்,மயக்கத்திற்கு காரணமான, நிலையில்லாத சுகபோகங்களை விரும்பி ஏற்காமல், இறை ஒளியில், கவனம் வைத்து, நல்ல ஒழுக்கம், நல்ல மனம், நல்ல சொல் மற்றும் நல்ல செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்போது இறைவன் தன் தயா ஒளி சொரூபத்துடன், நம் சிரநடுமூளைப்பகுதி பீடத்தில் வெளிப்பட்டு, இருந்து நம்மை வழிநடத்தி என்றும் துணையாக வருவார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று வகுத்த வழி சட்டத்தை யாரும், புரிந்து கொள்ளாதது, அறியாமையே, இது தெரியாமல் மனிதன் எப்படியோ வாழ்ந்துகொண்டு இருப்பது வருந்தத்தக்கதே.
மனிதன் ஒளி உடலோடு மரணமில்லாது என்றும் வாழ்பவன் என்பதை உணர்த்தவே, 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தென் இந்தியாவில் தமிழ்நாட்டில் வடலுாரில் அருகே உள்ள மேட்டுக்குப்பம் என்ற கிராமத்தில் “சித்தி வளாகம்” என்ற இடத்தில் ‘ராமலிங்கம்’ என்ற பெயர் கொண்ட ஒரு ஞானி தன் தூய உடலை அழியாத ஒளி உடம்பாகவும் கடவுள் அருளால் மாற்றப்பெற்று 1874 ஜனவரி 30ம் தேதி முதல் கடவுள் மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அருட்பெருஞ்ஜோதிக் கடவுளின் விருப்பத்திற்கு இணங்க தான் பெற்ற “ஒப்பற்ற பெருவாழ்வை” உலக மக்கள் யாவரும் பெற்று இன்பம் அடைதலே, “திருவருட்பிரகாசவள்ளலார்” பிறப்பின் நோக்கமும் அவர் அடைந்த திரிதேக சித்தியின் முடிவுமாகும். இதை அவர் தாம் வெளியிட்ட ‘திருஅருட்பா” என்ற நூலில் தெரிவித்திருக்கின்றார். இவர் தோற்றுவித்த “சத்திய ஞானசபையும் தர்மசாலையும், வடலுாரில் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தயவு ஒளி அறக்கட்டளை கோவை.
ACTIONS ACROSS THE GLOBE
How We’ve Made an Impact Together
Vestibulum ac libero ut sem aliquet posuere. Ut ac nulla vehicula eros fringilla sollicitudin eget suscipit diam.